1 முதல் 12 வகுப்பு கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள்

1 முதல் 12 வகுப்பு  கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள்


1st to 12th class education television and private television broadcast details

அன்பு மாணவர்களே... வீட்டிலிருந்தே கல்வி கற்பதற்கு ஏதுவாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை, கல்வி தொலைகாட்சியில் ‘வீட்டுப் பள்ளி' வாயிலாக பாடங்கள் கற்பிக்கும் புதிய காட்சிவழிக் கல்வியைஅறிமுகப்படுத்தியுள்ளது. 

வகுப்பு மற்றும் பாட வாரியாக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளில் எவ்வாறு வகுப்புகள் நடத்தப்படுகின்றதோ, அதே வகையில் கல்வி தொலைக்காட்சியில் வார நாட்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

சனிக்கிழமைகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தடையும் - விடையும் என்ற கேள்வி - பதில் நிகழ்ச்சியும், ஞாயிற்றுகிழமைகளில் கலை சார்ந்த நிகழ்ச்சிகளும் கல்வி தொலைக்காட்சியில் மட்டும் ஒளிபரப்பப்படுகிறது. 

இந்த கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் சேனல்கள் மற்றும் நேரம் பற்றிய விவரங்கள் அட்டவணையாக தரப்பட்டுள்ளது. 
1 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான ஒளிபரப்பு அட்டவணை பள்ளி சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பமாகும். 

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பள்ளி நிகழ்ச்சி மடிக்கனிணியின் வாயிலாக பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமைகளில் மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகள் முடியும் வரை NEET | JEE பாடங்கள் சேர்த்து ஒளிபரப்பப்படும்.







முதல் நாள் ஒளிபரப்பப்பட்ட காணொலி பாடங்கள் மறுநாள் கல்வி தொலைக்காட்சியின் YouTube Channel - www.youtube.com/c/kalvitvofficial மற்றும் இணையதளத்தில் (www.kalvitholaikaatchi.com) பதிவேற்றம் செய்யப்படும். மாணவர்கள்
மேற்கண்ட ஒளிபரப்பு அட்டவணையை கத்தரித்து வைத்து படித்து பயன்பெறலாம்.

Post a Comment

2 Comments