8Th Tamil Lesson Plan December Week 2

 8Th Tamil Lesson Plan  Dec Week 2(13-12-21 To 18-12-21)


நாள்                        :         13-12-2021   முதல்  18-12-2021                                      

வாரம்                    :         டிசம்பர் -  இரண்டாம் வாரம்

வகுப்பு                  :         எட்டாம் வகுப்பு   ( புத்தாக்கப் பயிற்சி)                             

பாடம்                    :         தமிழ்



பாடத்தலைப்பு    :  புத்தாக்கப்பயிற்சி 13 முதல் 15

பக்க எண்              :   45 – 54



நோக்கம்  :

  • மனவரைபடம் உருவாக்குதல்
  • அறிவிப்பைச் செய்தியாகவும், செய்தியைக் கடிதமாகவும் எழுதிப் பழகுதல்
  • கட்டுரை எழுதும் அமைப்பினை அறிந்து கட்டுரை எழுதுதல்

கற்றல் விளைவுகள்:

  • ஒன்றைப்படித்து முழுமையான பொருண்மையை உணர்ந்து அதன் பயன்பாட்டினைக் கூறுதல்.
  •  படித்தவற்றைச் சிந்தித்து வினாக்கள் எழுப்பி அவற்றை மேலும் சிறப்பாகப் புரிந்துக் கொள்ளுதல்.
  • பல்வேறு சூழல்களில்/நிகழ்வின் போது மற்றவர்கள் கூறியவற்றைத் தமது சொந்த மொழியில் எழுதுதல்.
  •  சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள் போன்றவற்றைப் பயன்படுத்திப் பல இதழ்களுக்கும்,நோக்கங்களுக்காகவும் எழுதுதல்.

கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :

  • மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த உதவுவது மனவரைபடம்.
  • எண்ணங்களை,சிந்தனைகளை ஒருங்கமைக்கும் படைப்பாற்றலே 

மனவரைபடம்.

  • மாணவர்கள் அறிந்த பாடப்பகுதியினை மனவரைபடமாக வரைதல்.
  • அறிவிப்பைச் செய்தியாக மாற்றுதல்.
  • அறிவிப்பு எதைப் பற்றியது என்பதனை அறிதல்.
  • சிறு சொற்றொடர் அமைத்தல்
  • வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் தொடர் இருத்தல்
  • அறிவிப்பில் உள்ள அனைத்து தகவல்களும் இடம் பெறுதல்
  • மூவிடங்கள்,காலங்கள் ஆகியவை மாறாமல் இருக்க வேண்டும்.
  • அறிவிப்பைக் கடிதமாக மாற்றுதல்:
  • கடிதம் முன்னிலையில் இருத்தல் வேண்டும்.
  • முக்காலங்களையும் கருத்தில் கொண்டு இருத்தல் வேண்டும்.
  • கடித வகையின் தன்மை அறிந்து கடிதப் பகுதிகள் இடம் பெற வேண்டும்.

 கட்டுரையின் அமைப்பு முறை அறிதல்

முன்னுரை : கட்டுரையின் அறிமுகமாக அமைய வேண்டும்.

பொருளுரை : எடுத்துக் கொண்ட தலைப்புகளுக்கேற்ப உள் தலைப்புகள் பலவற்றையும் கொண்டதாக பொருளுரை அமைதல் வேண்டும்.

முடிவுரை : கட்டுரையில் கூறப்பட்டச் செய்திகளைத் தொகுத்துக் கூறுவதாக அமைய வேண்டும்.

வலுவூட்டல்:

கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி  பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

மதிப்பீடு:

பயிற்சிப் புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகளுக்கு விடைக் காணுதல்

தொடர்பணி:

  • உமது பாடப்பகுதியில் உள்ள ஒரு பாடத்திற்கு மனவரைபடம் வரைந்து வருக.
  • தங்களுக்கு கிடைத்த அறிவிப்பை செய்தியாக மாற்றி எழுதி வருக.
  • நீ விரும்பு கவிஞர் குறித்து கட்டுரை எழுதி வருக


Post a Comment

0 Comments