6 Th Std Tamil Lesson Plan Dec Week 2

 6 Th Std  Tamil Lesson Plan  Dec Week 2(13-12-21 To 18-12-21)


நாள்                         :     13-12-2021   முதல்  18-12-2021                                   

வாரம்                     :     டிசம்பர் -  இரண்டாம்  வாரம்

வகுப்பு                  :     ஆறாம் வகுப்பு ( புத்தாக்கப் பயிற்சி)                             

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு   :  புத்தாக்கப்பயிற்சி 10 முதல் 12

பக்க எண் :         48 முதல் 54



நோக்கம்  :

  • மொழி பெயர்த்தல்
  • வினா உருவாக்குதல்
  • படித்துப் பொருள் உணர்தல்


கற்றல் விளைவுகள்:

  • சொற்களின் பொருண்மையை அகராதியில் கண்டறிதல்.
  •  தாங்கள் படித்த, கேட்ட ( சமூகம், நகைச்சுவை,வீரச்செயல்கள் ) கருத்துகள் பற்றிப் பேசவும்,வினாக்கள் எழுப்பவும் தங்கள் நோக்கத்திற்கு ஆதரவான விளக்கம் அளிக்கவும் இயலுதல்.
  • தாங்கள் கேட்ட அல்லது படித்த பல்வேறு கதைகளைப் பற்றிப் பேசவும்.அவற்றின் மீதான விவாதம் நடத்தவும்,பகுப்பாய்வு செய்யவும் வாய்ப்பு அளித்தல்.


கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :

  •  பிற மொழிச்சொற்களுக்கான தமிழ் சொற்கள் அறிதல்.
  •  தற்காலத்தில் பழக்கத்தில் பயன்படுத்தப்படும் பிற மொழிச்சொற்களுக்கான தமிழ் சொல் அறிந்து பயன்படுத்துதல்.


 நேச்சர்           -        இயற்கை

மார்னிங்        -        காலை

பேக்              -        பை

ஸ்கூல்           -        பள்ளி 


  • வினா என்பது வினவுதல், கேட்டல் எனப் பொருள்படும்.
  • வினாப் பொருளைத் தரும் வினா எழுத்துகளை அறிதல்.
  • வினா எழுத்துகளைப் பயன்படுத்தி வினா சொற்களை அமைத்தல்.
  • பொருளுணர்ந்து படிப்பதால் மட்டுமே கருத்தைப் புரிந்துக் கொள்ள முடியும்.
  • கேட்பது, பேசுவது இரண்டும் பொருள் புரியும் வகையில் அமைதல் வேண்டும்.
  • படிப்பதில் பொருள் உணர்தல்


வலுவூட்டல்:

கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி  பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.


மதிப்பீடு:


 பயிற்சிப்புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகளுக்கு மாணவர்கள் விடை காண செய்தல் 


தொடர்பணி:


  • அன்றாட வாழ்வில் நாமும் தினமும் பயன்படுத்தகூடிய பிறமொழிச்சொற்களை அடையாளம் கண்டு அவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களாக மாற்றி எழுதி வரசெல்லூதல் .
  • நும் பாடப்பகுதியில் ஒரு உரைப்பத்தியினைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்கி எழுதி வருக.
  • நீங்கள் உருவாக்கிய உரைப்பத்தி வினாவிற்கு விடை எழுதி வருக.


Post a Comment

0 Comments